அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • இந்த மாதத் தொடக்கத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் ஆரம்பித்தது
  • சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையத்தின் தகவல்படி, “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து விழுப்புரத்தின் செம்மேடு, கோவையின் வால்பாறை மற்றும் சின்னக்கலார் பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.