This Article is From May 27, 2020

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

"மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சிஸ் வரை பதிவாகக்கூடும்."

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

""தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால்..."

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது
  • தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
  • இன்று மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சிஸ் வரை பதிவாகக்கூடும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்பகல் 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு மீன்வர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும். 

நாளை தமிகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் அதிகப்டசமாக 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.