2019-ன் ட்ரெண்டிங் ஹாஷ்டேக்ஸ் - இந்திய அளவில் ‘டாப்’ இடம்பிடித்த ‘தல’ அஜித்தின் #Viswasam!

கிரிக்கெட் உலகக் கோப்பை, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், #CWC19 என்கின்ற ஹாஷ்டேக் மூன்றாவது இடத்தைப் பிடித்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
2019-ன் ட்ரெண்டிங் ஹாஷ்டேக்ஸ் - இந்திய அளவில் ‘டாப்’ இடம்பிடித்த ‘தல’ அஜித்தின் #Viswasam!

#LokSabhaElections2019 என்கின்ற ஹாஷ்டேக் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘ஹாஷ்டேக்ஸ்' (#) அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு எந்தெந்த ஹாஷ்டேக்ஸ் டாப் இடம் பிடித்துள்ளன என்கின்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், தல அஜித்தின் ‘விஸ்வாசம்' வெளியாகி மெகா-ஹிட் அடித்தது. அதனால், ட்விட்டரில் #Viswasam படம் குறித்த ஹாஷ்டேக்தான் அதிக முறை பகிரப்பட்டு, டாப் இடம் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, #LokSabhaElections2019 என்கின்ற ஹாஷ்டேக் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அரசியல்வாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு ட்விட்டர் பக்கங்கள் இந்த ஹாஷ்டேக்-ஐ நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் பயன்படுத்தின. 

கிரிக்கெட் உலகக் கோப்பை, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், #CWC19 என்கின்ற ஹாஷ்டேக் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

அதைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான மகர்ஷியின் #Maharshi என்கின்ற ஹாஷ்டேக்கும், #NewProfilePic என்கின்ற ஹாஷ்டேக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

இந்த ஆண்டு ட்விட்டர், சிறப்பம்சமாக எமோஜிக்களை தனது தளத்தில் அறிமுகம் செய்தது. அதுவும் பயனர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. 

ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக் மூலம், அதற்கு சம்பந்தமான விஷயங்களை மட்டும் வடிகட்டி எடுக்க முடியும். 


 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................