This Article is From Dec 02, 2019

“நாடாளுமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் முருகன் கோயில் இருந்தது!”- Seeman பகீர்

Seeman News - "ஆனால், இப்படி நாம் தரவுகளோடு பேசினால், எந்த பதிலும் வராது"

“நாடாளுமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் முருகன் கோயில் இருந்தது!”- Seeman பகீர்

Seeman News - "நான் அதைப் பேசிவிட்டேன், இதைப் பேசிவிட்டேன் என்று கண்டனங்களை மட்டும் தெரிவித்து வருகிறார்கள்."

Seeman News - மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைத்த பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பாபர் மசூதி தீர்ப்பு குறித்துப் பேசினார். 

“பாபர் மசூதி தீர்ப்பு எதனடிப்படையில் கொடுக்கப்பட்டது. நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இதிகாசங்கள், புராணங்களை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பு வந்தவுடன், அதை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சொன்னார்கள். எல்லோரும் இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை ஏற்க வேண்டும் என்கிறார்கள்.

முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டு வந்தீர்களே. அதுவும் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்தானே. நீங்கள் பாபர் மசூதி விவகாரத்தில் மட்டும் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து கொண்டால், முத்தலாக் விஷயத்திலும் நம்பிக்கையின் அடிப்படையில்தானே நடந்திருக்க வேண்டும்.

இல்லை, நீங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று வைத்துக் கொண்டால், பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை யாருக்கும் கொடுக்க முடியாது. இரு தரப்புக்கும் மாற்று இடத்தில் தலா 5 ஏக்கர் ஒதுக்கப்படும் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். ஆனால், இப்படி நாம் தரவுகளோடு பேசினால், எந்த பதிலும் வராது. மாறாக, நான் அதைப் பேசிவிட்டேன், இதைப் பேசிவிட்டேன் என்று கண்டனங்களை மட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

இப்போது நான் சொல்கிறேன்… இந்திய நாடாளுமன்றம் இருக்கும் இடத்தில் முன்னதாக ஒரு முருகன் கோயில் இருந்தது. அந்தக் கோயிலை இடித்துவிட்டுத்தான் நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டது. இது தமிழ்த்தேசிய இன மக்களின் நம்பிக்கை. இதைக் கேட்கும் போது உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா. அதைப் போலத்தானே இஸ்லாமியர்களுக்கும். ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் இஸ்லாமியர்கள் மசூதியைக் கட்டினார்கள் என்று குற்றம் சாட்டினீர்கள். ஆனால், தீர்ப்பிலேயே அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான அடையளம் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதைப் பற்றி பேசக் கூட அனுமதி தரப்படுவதில்லை,” என்று கூட்டத்தில் உரையாற்றினார் சீமான்.


 

.