விழா நடக்கும் இடங்களில் ஒரு பேனர் வைப்பதில் தவறில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரு திருமணமோ, அரசு விழாவோ அதனை விளக்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஒரு பேனர் வைப்பதில் தவறு இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விழா நடக்கும் இடங்களில் ஒரு பேனர் வைப்பதில் தவறில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரு பேனர் வைப்பதில் தவறு இல்லை; அமைச்சர் செல்லூர் ராஜூ


விழா நடக்கும் இடங்களில் ஒரு பேனர் வைத்தால் தவறில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பல்வேறு இடங்களிலும் சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. மீடியனில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. 

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதேபோல், பேனரை அச்சடித்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. எனினும் பேனரை வைத்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தருந்தனர். 

இந்நிலையில், மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்று, அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்து இருந்தனர். அதனை அகற்றும்படி கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, அரசு திட்டம் துவக்கப்படும் இடத்தில் அந்த திட்டத்தை விளக்கும் வகையில் ஒரு பேனர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். 

அப்போது தான் அந்த திட்டம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும். ஒரு திருமணமோ, அரசு விழாவோ அதனை விளக்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஒரு பேனர் வைப்பதில் தவறு இல்லை'' இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

முன்னதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, பேனர் சரிந்து பெண் உயிரிழந்த விவகாரம், திடீரென ஏற்பட்ட சம்பவம். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................