This Article is From Nov 12, 2018

சத்தீஸ்கர் தேர்தலையொட்டி ட்ரோன் மூலம் மாவோயிஸ்ட்கள் கண்காணிப்பு: பகீர் காட்சிகள்!

Election in Chhattisgarh 2018: மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது

சத்தீஸ்கர் தேர்தலையொட்டி ட்ரோன் மூலம் மாவோயிஸ்ட்கள் கண்காணிப்பு: பகீர் காட்சிகள்!

ட்ரோன் மூலம் பெறப்பட்ட காட்சிகளால் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டப் பகுதியை கட்டுக்குள் கொண்டு வருவது சுலபமாகும் எனப்படுகிறது

Jagdalpur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாநிலத்தில் மீதம் இருக்கும் 72 தொகுதிகளுக்கு வரும் 20 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும்.

தேர்தல் நடந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று மக்களிடம் மாவோயிஸ்ட்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

கன்கர் மாவட்டத்தில் இருக்கும் அன்டகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள், வெடி குண்டுகளை வைத்து தாக்குல் சம்பவத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.எஃப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், அன்டகார் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இப்படி தேர்தலை குலைக்கும் நோக்கில் மாவோயிஸ்ட்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதை கணித்திருந்த பாதுகாப்புப் படையினர், இதுவரை இல்லாத வகையில் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி ட்ரோன் எடுத்தக் காட்சிகளில் தேர்தல் நடக்கும் இடத்தையொட்டி மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கரின் கவுஷால்னார் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பது ட்ரோன் மூலம் தெரிய வந்துள்ளது. அங்கு பாதுகாப்புப் படையினரே இல்லை என்றும் கூறப்படுகிறது. கவுஷால்னாரைச் சுற்றியுள்ள பகுதிகளை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ட்ரோன் காட்சிகள் மூலம் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் தெரியவந்திருந்தாலும், வெகு நேரம் கழித்தே அது குறித்தான தெளிவான காட்சிகள் பாதுகாப்புப் படையினர் கையில் வரும். எனவே, ட்ரோனால் தீவிரவாத தாக்குதலை தடுக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. மேலும், சத்தீஸ்கரின் அடர்வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பல்வேறு விதமான வலைகளை வைத்திருப்பார்கள். அதை உடனடியாக தாண்டி மாவோயிஸ்ட்களை சுற்றி வளைப்பது சுலபமான காரியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

.