‘முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் தெலங்கானா அரசு ஏமாற்றிவிட்டது!’- காங்கிரஸ்

காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, சிபிஐ மற்றும் தெலங்கானா ஜனா சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் தெலங்கானா அரசு ஏமாற்றிவிட்டது!’- காங்கிரஸ்

தெ.ரா.ச கட்சி பாஜக-வுடன் அதிகாரபூர்வமற்ற கூட்டணியில் இருக்கிறது, காங்கிரஸ்


Hyderabad: 

‘தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் 12 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டனர்' என்று மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து குமார் ரெட்டி மேலும் பேசுகையில், ‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், இப்போது அது குறித்து பேசுவதை அவர் தவிர்த்து வருகிறார். அவர் கூறும் அனைத்துமே பொய்யாகத்தான் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு 12 சதவிகித இட ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று அவர் கூறியது, அந்த சமூகத்தினரை கவர மட்டும் தான், நிறைவேற்றக் கிடையாது என்பது இப்போது புரிகிறதா?

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடந்த போது, தெ.ரா.ச கட்சி பாஜக-வின் வேட்பாளுருக்கு ஆதரவு தெரிவித்தது. இதன் மூலம் இவர்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தலிலும் அதிகாரபூர்வமற்றக் கூட்டணி தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என்று பேசினார்.

காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, சிபிஐ மற்றும் தெலங்கானா ஜனா சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி, தெலங்கானாவில் இருக்கும் அனைத்து சட்டப்பரேவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................