உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பள்ளியில் ஆண்களைக் காட்டிலும் பெண் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பெண்கள் உயர் கல்வி படிக்க அனுமதிக்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி உயர் கல்வியிலும் முதன்மையாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பொது மற்றும் தனியார் துறைக் கல்வியின் நிலை சமமற்றதாக உள்ளது.


New Delhi: 

பெண் பட்டதாரிகள் பட்டமளிப்பு விழாவில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து பதக்கங்களை வாங்கினாலும் உயர்கல்வி அமைப்பில் பெண்கள் பதிவு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பது கவலை அளிக்கிறது என்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் திங்களன்று கூறினார்.

பெண்கள் உயர் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கிழக்கு நிறுவனங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளனர். பள்ளியில் ஆண்களைக் காட்டிலும் பெண் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பெண்கள் உயர் கல்வி படிக்க அனுமதிக்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி உயர் கல்வியிலும் முதன்மையாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான உயர் கல்வி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசைகளின் துவக்க விழாவில் ராம் நாத் கோவிந்த் உரையாற்றிய போது இதைக் கூறினார்.

நான் நாடு முழுவதும் பட்டமளிப்பு விழாவிற்கு  பல்கலைக்கழங்களுக்கு சென்றதில் பட்டதாரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பெண்கள் முதலிடத்தைப் பெறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கேன். பல குடும்பங்கள் பெண்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பை கொடுக்க மறுப்பதை நாடும் சமூகமும் அதை சுட்டிக் காட்ட வேண்டும். இந்தியாவில் உயர் கல்விக்கான சமீபத்திய விரிவாக்கம் அணுகுமுறையை மேம்படுத்துவதோடு, சமபங்கு வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வியின் தரம் கவலைக்குள்ளாக்குகிறது.  பொது மற்றும் தனியார் துறைக் கல்வியின் நிலை சமமற்றதாக உள்ளது. உயர் கல்வி கட்டமைப்பை வளர்ப்பதன் மூலம் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.

மேலும், உயர் கல்வி என்பது தனிநபர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது  மட்டுமல்லாமல், தேசிய இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றை அடைவதற்கான அணுகுமுறையையும் கொடுக்கிறது என்று கூறினார்.

உலகளாவிய தரவரிசையில் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டியலில் இந்தியாவும் எதிர்காலத்தில் இடம் பிடிக்கும். நான்காம் தொழிற்துறை புரட்சியில் வாழ்ந்து வருகிறோம். கல்விக்கு தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் நமது திறனை நாம் உணர முடியாது.

உள்கட்டமைப்பை எண்கள் மற்றும் தரநிலைகளால் அளவிடப்படுகிறது.  அதனால் தான் தரவரிசைப் பட்டியலில் எந்த நிறுவனம் வருகிறது என்பதை கேட்க ஆர்வமாக காத்திருக்கிறோம். உலகளாவிய தரவரிசையில் முதலிடம் பெறவும் தரவரிசைப் படுத்தலை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................