இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த சிம்பா! எத்தனை கோடி தெரியுமா?

தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த சிம்பா! எத்தனை கோடி தெரியுமா?

ஹைலைட்ஸ்

  1. கடந்த ஜுலை 9ல் இப்படம் வெளியானது
  2. தமிழில் இப்படத்திற்கு சித்தார்த், ஐஷ்வர்யா ராஜேஷ் குரல் கொடுத்துள்ளனர்
  3. இந்தியாவில் மட்டும் 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு உலக திரையரங்கையே அதிர வைத்த அனிமேஷன் திரைப்படம் ‘தி லயன் கிங்'.  சுமார் 25ஆண்டுகள் கழித்து தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிரடி அனிமேஷன் முறையில் வெளியிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஃபேவரூ இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படம் கடந்த ஜூலை 9ம் தேதி வெளியாகி இந்தியாவில் அதிக வசூல் படைத்துள்ளது.

தமிழில் சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சாமி, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மனோ பாலா, ஆகியோர் பினினணி குரல் கொடுத்துள்ளனர்.  பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்..

அமெரிக்காவின் கம்ப்யூட்டர் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் தயாரான இந்த திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 4 வது ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................