பிரிவு 35 ஏ குறித்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரிவு 35 ஏ குறித்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!
New Delhi: 

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று மீண்டும் விசாரிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

35 ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் இருந்தே, ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு இன்னும் 3 மாதத்துக்குள் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, தற்போது 35 ஏ பிரிவு குறித்து விசாரிக்கப்பட்டால் பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்று ஜம்மூ - காஷ்மீர் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................