இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!

Sri Lanka Blast: தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!

Sri Lanka Terror Attack: சுமார் 10,000 ராணுவ வீரர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Colombo: 

சென்ற ஞாயிற்றுக் கிழமை, இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் தந்தை மற்றும் 2 சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவரும் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக இலங்கை போலீஸ் தரப்பு ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளது. 

கிழக்கு இலங்கையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜைனி ஹஷீம், ரில்வான் ஹஷீம் மற்றும் முகமது ஹஷீம் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூவரும் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜக்ரன் ஹஷீமின் மைத்துனர் என சொல்லப்படும் நியாஸ் ஷரீஃப்தான், இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜக்ரன்தான் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நியாஸ் குறித்து தெரிவித்துள்ளார். 

தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது. சுமார் 10,000 ராணுவ வீரர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று நம்பப்படும் இரு முஸ்லீம் அமைப்புகள் மீதுதான் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக் கிழமை கால்முனை என்ற டவுனில் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை மீது, மர்ம கும்பல் ஒன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில்தான் 15 கொல்லப்பட்டுனர். 


 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................