This Article is From Dec 31, 2019

முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை: இன்று மழைக்கு வாய்ப்பு?

காற்றின் சுழற்சி காராணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை: இன்று மழைக்கு வாய்ப்பு?

வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 

அதிகபட்சமாக பொன்னேரி டிஜிபி அலுவலகம், எண்ணூரில் தலா 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை 2 சதவீதம் அதிகமாகவே பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றின் சுழற்சி காராணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது.

.