பணத்தை தின்று தீர்த்த நாய்…! விவரங்கள் உள்ளே

போஸ்ட்பாக்ஸில் கவரில் வைத்திருந்த மொத்த பணத்தையும் பசியில் இருந்த நாய் தின்று தீர்த்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பணத்தை தின்று தீர்த்த நாய்…! விவரங்கள் உள்ளே

பணத்தை தின்ற செய்திக்குப் பின் இந்த நாய் மிகவும் பிரபலமாகிவிட்டது.


இங்கிலாந்து வடக்கு வேர்ஸ் பகுதியில் லேப்ராடால் வகையின நாய் 160 பவுண்டு பணத்தை மென்று தின்றுள்ளது. 

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் கொடுத்துள்ள செய்தியின்படி 9 வயது பையன் வளர்த்து வரும் நாயொன்று 160 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15,000 ஐ தின் று தீர்த்துள்ளது. 

இது குறித்து நாயின் உரிமையாளர் ஜூடித் ரைட் ஸ்கை நியூஸ்க்கு கொடுத்த பேட்டியில்,  எங்களுக்கு வரவேண்டிய பணத்தினை கவரில் போட்டு தபால் பெட்டியில் போட்டுள்ளனர். போஸ்ட்பாக்ஸில் கவரில் வைத்திருந்த மொத்த பணத்தையும் பசியில் இருந்த நாய் தின்று தீர்த்துள்ளது. இதையறிந்த உரிமையாளர் உடனடியாக அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதற்கு தனியாக 130 பவுண்டுகள்  (ரூ. 11,000) செலவழித்துள்ளார்.

இதற்கு முன்பு இப்படி பணத்தை சாப்பிட்டதில்லையென பிபிசியிடம் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக நாயின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் மீட்டு விட்டோம் என்று உரிமையாளர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காதவண்ணம் முன்னேற்பாடுகளை செய்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................