This Article is From Mar 10, 2019

4 மாநில மற்றும் லோக்சபா தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு..!

545 லோக்சபா தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

4 மாநில மற்றும் லோக்சபா தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு..!

தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது

New Delhi:

2019 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. அதேபோல நான்கு மாநிலங்களுக்கும், சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் எப்போது சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்பது குறித்து இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணி அளவில் தேர்தல் தேதிகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

545 லோக்சபா தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியதை அடுத்து, தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தரப்பு இது குறித்து கூறுகையில், 'தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டால், மத்திய அரசால் எந்த திட்டங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிட முடியாது. ஆகவே, அரசுக்கு உதவும் வகையில் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது' என்று பகிரங்க குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணைய தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. 

 

 

.