This Article is From Nov 16, 2018

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி #LiveUpdates

7 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவாரண முகாம்களில் 70 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடந்த பின்னர் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்

லைவ் அப்டேட்ஸ்:

இரவு 09.15 - கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். மீட்பு நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரவு 7.11 - காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாலை 5.30 - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் மின்சீரமைப்பு பணி நடப்பதாக தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக்கழகம் தகவல்.

மாலை 4.00 - திண்டுக்கல் அருகே மையம் கொண்டிருந்த கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கேரளாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதியம் 1.00 - தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் புயல் பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போனில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

காலை  11.45 - இன்று மதியம் முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாம் - வானிலை ஆய்வு மையம் தகவல். மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மழை இருக்கும் - வானிலை ஆய்வு மையம்.

காலை 11.15 - கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் 11 பேர் உயிரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

காலை 11.00 - முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு அதிகளவு ஏற்படவில்லையென்றும் புயல் பாதிப்பை கணக்கிட்டு வருவதாகவும் கூறினார். மின்கம்பங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார சீர்கேட்டை தடுக்க புயல் பாதிப்பு பகுதிகளில் 100 டன் ப்ளீச்சிங் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காலை 8.45 – சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைப்பு – இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சட்ட பல்கலைக் கழகம் தகவல்.

மேலும் படிக்க - "திண்டுக்கல்லில் ‘கஜா' புயல் மையம்… 3 மாவட்டங்களுக்கு கனமழை!"

காலை 8.30 – தீவிர புயலாக இருந்த கஜா, வலுவிழந்து புயல் நிலைக்கு திரும்பியுள்ளது. வலு குறைந்தாலும் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காலை 7.30 – பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் : 1. தஞ்சை, 2. திருவாரூர், 3. ராமநாதபுரம், 4. கடலூர், 5. அரியலூர், 6.நாகை, 7. சிவகங்கை, 8.புதுக்கோட்டை, 9. மதுரை, 10. தேனி, 11. விழுப்புரம், 12. திண்டுக்கல், 13. திருப்பூர், 14. திருச்சி,

காலை 7.25 – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் : 1. விருதுநகர், 2. தூத்துக்குடி, 3. கரூர், 4. ஈரோடு, 5. சேலம்.

காலை 7.20 – கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காலை 7. 10 - திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. விருதுநகர், தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காலை 6.50 – தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

காலை 6.45 – சிவகங்கை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

காலை 6.30 – கஜா புயல் பாதிப்பு காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,

தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காலை 7.00 – சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

நள்ளிரவு 1:24 – நாகையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டதாக தகவல். சாலைப் போக்குவரத்து அதிகளவு துண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு 1.06 - புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும்போது காற்று அதிக வேகத்தில் வீசத் தொடங்கும் – வானிலை ஆய்வு மையம்

நள்ளிரவு 1.04 - நாகை, வேதாரண்யத்திற்கு இடையே புயல் கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. காற்றின் வேகம் குறையாது. கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 1 மணி நேரத்திற்கு நடக்கும். – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.

நள்ளிரவு 12.44 - வேதாரண்யத்தில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் முறிந்து வீட்டின் கூரைகள் இடிந்து விழுந்தன.

நள்ளிரவு 12.40 - தற்போது அதிவேக காற்றுப்பகுதி கரையை கடக்கிறது. இதனால் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

நள்ளிரவு 12.37 - கண் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறையும் என தகவல்.

நள்ளிரவு 12.35 - கஜா புயல் முழுமையாக கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரமாகும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

நள்ளிரவு 12.31  - கஜா புயலின் மையப்பகுதி நாகை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

நள்ளிரவு 12.25 - பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

நள்ளிரவு 12.19 - இராமேஸ்வரம் - பாம்பன் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

நள்ளிரவு 12.17 - நாகையில் சூறை காற்றுடன் கன மழை பெய்து வருவதால், மின்சாரம் துண்டிப்பு.

நள்ளிரவு 12.16 - அடுத்த ஒரு மணிநேரத்தில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும்.

நள்ளிரவு 12.15 - அடுத்த 3 மணிநேரத்திற்கு கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

நள்ளிரவு 12.11 - புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யம் பகுதியில் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.

நள்ளிரவு 12.08 - இன்னும் ஒரு மணிநேரத்தில் புயலின் மையப்பகுதி கரையைக் கடக்க தொடங்கும்.

நள்ளிரவு 12.09 - கஜா புயலால் காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.

நள்ளிரவு 12.06 - கஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்க தொடங்கியது.

இரவு 12.00 -  பாம்பன் பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

இரவு 11.57 - 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு.

இரவு 11.55 - நாகையில் பலத்த மழை பெய்து வருகிறது.

இரவு 11.50 - புதுச்சேரியில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

இரவு 11.48 - தீவிர புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.

இரவு 11.45 -  கஜா புயல் நாகைக்கு கிழக்கே 65 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் கரையைக் கடக்கத் தொடங்கும். கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இரவு 11.15 - முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின் சேவை நிறுத்தம்இரவு

11.00 - நாகையின் கிழக்கே 85 கி.மீ. தொலைவில் உள்ளது கஜா புயல்

இரவு 10.50 – கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார். தொற்று நோய் தடுப்புக்காக 200 டன் ப்ளீச்சிங் பவுடர் தயாராக உள்ளது – சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர்.

இரவு 10.40 - நாகைக்கு தெற்கே புயல் கரையைக் கடக்கும் என தகவல். அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக்கூடும்.

​இரவு 10.30 - 6 மாவட்ட நிவாரண முகாம்களில் 67- ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10.15 நாகையிலிருந்து 85 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 16 கி.மீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

09.06 மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இரவு 10.30 மணியில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்.

09.05 காரைக்காலுக்கு கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07.35 தற்போதைய நிலவரப்படி நாகையிலிருந்து 135 கி.மீ தூரத்தில் உள்ளது. 10.கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

06.58 படிப்படியாக வேகம் அதிகரித்து 10 மணி அளவில் அதிகப்படியான காற்று வீசக்கூடும்.

06.57 காரைக்கால் பகுதியில் மழை துவங்கியுள்ளது. 

06.55 கஜா புயலின் வெளிப்பகுதி கரையைத் தொடத் தொடங்கியுள்ளது. 

06.50  தற்போதைய நிலவரப்படி நாகையிலிருந்து 138 கி.மீ தூரத்தில் உள்ளது. 10.கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

05.45 புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05.30 தற்போதைய நிலவரப்படி கஜா புயல் நாகையிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ளது. மணிக்கு 21 கி.மீ.வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

04.24; தற்போதைய நிலவரப்படி இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

04.20; கஜா புயல் நாகையின் வடகிழக்கே 187 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

04.15; 21 கி.மீ வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது.

மதியம் 2.00 - காரைக்காலில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மதியம் 1.55 - நாகை துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காலை 10:48 - 'கஜா' புயல், இன்று மதியம் அதி தீவிரமாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு கரையைக் கடக்கும் போது அதன் தீவிரம் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  

காலை 9: 28 - 

காலை 9:26 - கடற்படையின் இரண்டு கப்பல்களான ரன்வீர் மற்றுக் காஞ்சர் தயார் நிலையில் உள்ளது. 

காலை 9:21 - தமிழகம் முழுவதும் 6,000 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காலை 8:45 - சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கஜா புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

காலை 8:40 - பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

‘கஜா' புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்க உள்ளது. கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கஜா கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாகப்பட்டிணத்திலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு கஜா புயல் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க - "கஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் இன்று பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து!"

கஜா புயலை சமாளிப்பதற்கு முன்னச்செரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது மாநில அரசு. குறிப்பாக, அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் 30,000 மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். 

மேலும் படிக்க - "கஜா புயல் காரணமாக புதுவையில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு"

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக கடலோரப் பகுதிகளில் 8 இடங்களில் உஷார் நிலையில் இருக்கின்றனர். 

 

மேலும் படிக்க - ‘கஜா' புயல்: முக்கியமான 10 தகவல்கள்!

.