This Article is From May 02, 2019

கிம் கர்தாஷி வீட்டு குளியலறையின் ஸ்பெஷாலிட்டியே இதுதான்...!

தற்போது கிம் கர்தாஷி லாஸ் ஏஞ்சலிஸ் உள்ள தன்னுடைய மேன்சனை மறு வடிவமைப்பு செய்தார். பல தீவிரமான ஆய்வுக்குப் பின் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். 

கிம் கர்தாஷி வீட்டு குளியலறையின் ஸ்பெஷாலிட்டியே இதுதான்...!

கிம்கர்தாஷியின் பேசின் இல்லாத சிங்க்

கிம் கர்தாஷியின் புது வீட்டின்  குளியலறையின் மர்மம்தான் இன்றைய நாளின் ட்ரெண்டாக இருந்து வருகிறது. கிம் கர்தாஷி அமெரிக்காவில் உள்ள பெண் தொழிலதிபர், இவருக்கு மாடலிங்க், நடிப்பு மற்றும் பல துறைகளில் ஆர்வம் உண்டும். 2003 ஆண்டு தன் காதலனாக இருந்த பாரிஸ் ஹில்டன் என்பவன் கிம் கர்தாஷியன் தன்னுடன் பேசிய செக்ஸ் ஆடியோவை 2007 வெளியிட்டான் அதிலிருந்து இவரை பிரபலமாக அமெரிக்க ஊடகங்கள் கவனிக்கத் தொடங்கின. 

தற்போது கிம் கர்தாஷி லாஸ் ஏஞ்சலிஸ் உள்ள தன்னுடைய மேன்சனை மறு வடிவமைப்பு செய்தார். பல தீவிரமான ஆய்வுக்குப் பின் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார்.  அதில் தன்னுடைய குளியலறையில் இருக்கும் புதுவிதமான் பேஸின் இல்லாத சிங்கினை அறிமுகப்படுத்துகிற வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நெட்டிசன்கள் மத்தியில் இந்த குளியலறை சின்ங் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  சிங்க் எப்படி வேலை பார்க்கிறது என்பதை வீடியோ மூலமாக விளக்குகிறார். 

பேஸின் இல்லாத சிங்க் தண்ணீர் போவதற்கு ஏற்ற வகையில் சற்று சரிவாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். இந்த சிங்க் 8 விதமான தனித்துவமான பதிப்புகளைக் கொண்டது. 

இந்த சிங்கை பார்த்தவர்கள் பலரும் கேட்பது இதன் விலையைத்தான் பீப்பிள் பத்திரிகை இந்தக் கேள்விக்கு விடையளித்துள்ள்து. தமரா டே பிரபலங்களின் ஒப்பந்ததாரர் ஆவார். அவர் இதன் விலை 25, 750 டாலர் என்கிறார். இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ. 18 லட்சம் ஆகும்.

தண்ணீரை சரியாக ஒரே இடத்தில் கொண்டு சேர்க்க சில தந்திரமான கோணங்களால் இந்த சிங்க்கை அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்

Click for more trending news


.