This Article is From Oct 30, 2018

தெலங்கானா தேர்தல்: இறுதிகட்டத்தில் காங்., கூட்டணி தொகுதி பங்கீடு!

தெலங்கானா மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது

தெலங்கானா தேர்தல்: இறுதிகட்டத்தில் காங்., கூட்டணி தொகுதி பங்கீடு!

தெலங்கானாவில் மொத்தம் இருக்கும் 119 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது

Hyderabad:

தெலங்கானா மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தெலங்கானாவில் மொத்தம் இருக்கும் 119 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலை காங்கிரஸ், டிடிஎஸ், டிஜேஎஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது. 

4 கட்சிகளுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் 4 கட்சிகளும், இறுதி தொகுதி பங்கீடுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மொத்தம் இருக்கும் 119-ல் 90 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், டிடிபி 15 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், டிஜேஎஸ் 9 தொகுதிகளிலும், சிபிஐ 5 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஆர்.சி.குன்டியா, ‘கூட்டணி கட்சிகளுக்குள் எத்தனை தொகுதிகள் பங்கிடப்பட்டது என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. இன்னும் ஓரிரு நாட்களில் அது குறித்து தெரியபடுத்தப்படும்.

வரும் வெள்ளிக் கிழமை, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் எங்கள் கட்சி வெளியிடும். முதற்கட்டமாக 60 முதல் 65 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, இறுதி வரைவு கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் வந்தவுடன் அதுவும் வெளியிடப்படும். கூட்டணியில் இருக்கும் 4 கட்சிகளும் தனித் தனி தேர்தல் அறிக்கைக் கொண்டு வந்தாலும், ஒரு பொதுவான அஜெண்டா கொண்டு வரவும் வாய்ப்புள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தேர்தலில் போட்டியிடப் போகும் 107 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக, 38 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

.