டென்மார்க் குடிமக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசாங்கமே இலவசமாக வழங்குகிறது.
2018 ஆம் ஆண்டின் மிகுந்த மகிழ்ச்சியான நாடாக டென்மார்க்-ஐ தேர்ந்தெடுத்துள்ளது உலக ஹாப்பினஸ் ரிப்போர்ட். மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது முறையாக டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால் அதில் மிக முக்கியமானது ‘hygge' என்று சொல்லப்படும் பண்பாட்டுக் கூறு பிரதான பங்காற்றுகிறது. hygge என்னும் வார்த்தையின் அர்த்தம், ‘சுகமானது' என்று சொல்ல முடியும். அதாவது கலாச்சார ரீதியாகவே பிணைப்புடன் ஒரு சமூகத்தை உருவாக்குவது என்று சொல்லலாம்.
அது, மாலை நேரத்தை பிடித்தவர்களுடன் கழிப்பதாக இருக்கலாம், பிக்னிக் செல்வதாக இருக்கலாம், மனதிற்கு நெருக்கமானவர்களுடன் காபி பருகுவதாக இருக்கலாம். இப்படி டென்மார்க் குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் டென்மார்க்கில் மக்களுக்கு இருக்கும் பெரும் கவலைகள் அரசாங்கத்தாலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. டென்மார்க் குடிமக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசாங்கமே இலவசமாக வழங்குகிறது. அவர்களின் ஓய்வூதிய திட்டமும் உலகில் சிறந்ததாக இருக்கிறது. உலகில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சுமை மக்கள் மீது இருந்தாலும், நல்ல சமூகத்தை கட்டமைக்க அதிக வரி செலுத்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.
இப்படி மக்களின் பிரதானப் பிரச்னைகளை டென்மார்க் அரசே கவனித்துக் கொள்வதால், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை கழிக்கின்றனர்.
Click for more
trending news