தீபாவளிக்கு வெடிக்க இருக்கும் ’ ‘பிகில்’- ‘பட்டாஸ்’!!!

படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெடிக்க இருக்கும் ’ ‘பிகில்’- ‘பட்டாஸ்’!!!

ஹைலைட்ஸ்

  • தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கிறார்
  • புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷுடன் ஸ்நேகா இப்படத்தில் நடிக்கிறார்
  • பிகில் படத்தோடு இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது

வெற்றிமாறனின் வடச்சென்னையை அடுத்து தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தைத் தொடர்ந்து துறை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருந்தார்.

இதனை அடுத்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் பிறந்தநாளான நேற்று படக்குழு வெளியிட்டது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு பட்டாசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தைப் பற்றி கூறியுள்ள இயக்குநர் துரை செந்தில் குமார், ‘படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் களரிக்கு முன்பு சோழர் காலத்தில் இருந்த ஒரு தற்காப்பு கலையை மைய்யப்படுத்தியது.

இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் மற்றும் ஸ்நேகா 15 முதல் 20 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டனர். இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

பட்டாஸ் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More News
Listen to the latest songs, only on JioSaavn.com