'தளபதி 63' பாடல்களை முதலில் நான் தான் பார்த்தேன் - மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்

இன்று காத்திருப்புக்கான காலம் முடிந்து விட்டது. ஏஜிஎஸ் - தளபதி விஜய்- அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் தளபதி 63 என்று விரைவில் வெளிவரவுள்ள செய்தியை தெரிவித்திருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'தளபதி 63' பாடல்களை முதலில் நான் தான் பார்த்தேன் - மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்

மெர்சல், சர்க்கார் படங்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ கூட்டணி விஜயின் 63 படத்தில் இணைந்துள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கான பாடல்களுக்கான பணிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்து  எடிட் செய்து ரஹ்மானிடம் காட்டியிருக்கிறார் இயக்குநர் அட்லி. 

பாடலைப் பார்த்த மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் “இங்கு யார் இருக்கிறார் பாருங்கள், எடிட் ஆன இரண்டு பாடல்களை நான் தான் முதலில் பார்த்தேன்” என்று மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்

இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்த அப்டேட்களை அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார். 

சமீபத்தில் தளபதி 63 படத்திற்கான அப்டேட் கேட்காதீர்கள் நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஜாலியாக கூறியிருந்தார்.

இன்று காத்திருப்புக்கான காலம் முடிந்து விட்டது. ஏஜிஎஸ் - தளபதி விஜய்- அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் தளபதி 63 என்று விரைவில் வெளிவரவுள்ள செய்தியை தெரிவித்திருந்தார்.

இயக்குநர் அட்லீ தளபதி விஜய்க்கு நடிப்பினை சொல்லிக் கொடுக்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்திருந்தார்.

 விஜயின் ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் படத்தை பலவகையிலும் பிரபலப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................