This Article is From Jul 31, 2019

துப்பாக்கியும் கையுமாக தல அஜித்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

துப்பாக்கியும் கையுமாக தல அஜித்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஹைலைட்ஸ்

  • தல அஜித் அடுத்து போனி கபூர் தயாரிப்பில் தனது 60வது படத்தில் நடிக்கிறார்
  • அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியாகிறது
  • அஜித் தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்

தல அஜித் நடிப்பதோடு இல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்திவருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

சமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அஜித் வருகையை அடுத்து போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கார் பந்தையத்தில் அஜித் கலந்துக்கொள்வது போல் புகைப்படம் ஒன்று இணயத்தில் வெளியாகி வைரலனது குறிப்பிடத்தக்கது.

.