கொலை செய்தவரைப் பழிவாங்கியா பாம்பு!

அந்நபர் கையில் எடுத்த உடன் திமிறி எழுந்த பாம்பின் தலை அந்நபரின் கையை பாய்ந்து கவ்வி கடித்துள்ளது

கொலை செய்தவரைப் பழிவாங்கியா பாம்பு!

ஹைலைட்ஸ்

  • பாம்பின் தலைப்பகுதி மட்டும் உயிர்ப்புடன் இருந்தது
  • தலை வெட்டுபட்ட பாம்பைக் கையால் எடுத்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார்
  • தலை வெட்டுபட்ட பாம்பைக் கையால் எடுத்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார்
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரால் கொல்லப்பட்ட பாம்பின் தலைப்பகுதி மட்டும் உயிர்ப்புடன் இருந்து கொன்றவரையே கடித்துப் பழி வாங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 27-ம் தேதி ஜெனிபர் என்பவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் நான்கு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்றைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர் தன் கணவரை அழைத்து அந்த பாம்பைக் கொல்லச் செய்துள்ளார். அந்தக் கணவரும் பாம்பை கொன்றுள்ளார். அதன் பின்னர் தலை வெட்டுபட்ட நிலையில் இருந்த பாம்பைக் கையால் எடுத்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார் அந்நபர்.

அப்போது பலத்த காயத்துடன் இருந்த தலைப்பகுதி மட்டும் உயிர்ப்புடன் இருந்துள்ளது. அந்நபர் கையில் எடுத்த உடன் திமிறி எழுந்த பாம்பின் தலை அந்நபரின் கையை பாய்ந்து கவ்வி கடித்துள்ளது.

பாம்பு தன் உடலில் இருந்து துண்டாகி விட்டதால் அதனது மொத்த விஷமும் தலைக்கு ஏறி இருந்துள்ளது. அறிவியலின் அடிப்படையில் கோப்ரா மற்றும் நச்சு வகைப் பாம்புகளுக்கு மரணம் அடைந்தப் பின்னரும் கடைசியாக பார்த்த பிம்பம் சில மணி நேரங்களுக்கு மூளையில் நீடித்து இருக்குமாம். அதன் அடிப்படையிலேயே அந்தப் பாம்பு கொன்றவரையே தன்னுடைய முழு விஷத்தையும் இறக்கி கடித்துள்ளது.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்நபருக்கு அவசர் கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள அந்நபருக்கு ஏறிய விஷத்தை இறக்க 26 விஷ முறிவு மருந்துகள் அளிக்கப்பட்டதாகவும் இது கூடுதலான அளவு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.Click for more trending news