காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்; பலருக்கு காயம்: Report

Kashmir grenade attack: இந்த தாக்குதலில் பலருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்; பலருக்கு காயம்: Report

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சய்யத் நுழைவாயிலுக்கு அருகே மக்கள் நின்றிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக கூறுகிறது போலீஸ். (File)

Srinagar:

ஸ்ரீநகரில் இருக்கும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில், தீவிரவாதிகள் கையெறிக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. 

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சய்யத் நுழைவாயிலுக்கு அருகே மக்கள் நின்றிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக கூறுகிறது போலீஸ்.

ஜம்மூ காஷ்மீர் போலீஸ், உள்ளூர் மக்களுக்கு, ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக நேற்று எச்சரித்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.