பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!

குவாதர் பகுதியில் உள்ள பியர்ல் கான்டினென்ட்டல் நட்சத்திர விடுதியில் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் சரமாரியக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!

4 பேர் ஆயுதங்களுடன் பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் நுழைந்துள்ளனர்

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான கவாதார் பகுதியானது சீன நிறுவனங்களின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் இடமாகும். இந்த பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலோசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் பகுதியில் உள்ள பியர்ல் கான்டினென்ட்டல் நட்சத்திர விடுதியில் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் சரமாரியக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் சியவுள்ளா லாங்கு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த தகவலின் படி, விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுடன் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் அங்கு இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த அதிகாரி முகமது அஸ்லாம் கூறும்போது, துப்பாக்கிச்சூடு சத்தம் மட்டும் கேட்டது அதுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த நட்சத்திர விடுதிக்குள் எந்த சீன மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அந்த விடுதியின் ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலானது, பாலோசிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு 3 வாரங்களில் நிகழ்ந்துள்ளது.


 

More News