காஷ்மீரில் எண்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

கெல்லர் பகுதியில் இன்று அதிகாலை சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் எண்கவுன்டர் நிகழ்ந்துள்ளது.

Srinagar: 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள கெல்லர் பகுதியில் நடந்த எண்வுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கெல்லர் பகுதியில் இன்று அதிகாலை சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைதொடர்ந்து, தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அந்த பகுதியில் ஒரே வாரத்தில் நடக்கும் மூன்றாவது எண்கவுன்டர் இது ஆகும். தொடர்ந்து அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................