அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 Share
EMAIL
PRINT
COMMENTS
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி
New Delhi: 

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஆராய்ச்சியுடன் கூடிய ஆசிரியர் பணியாகும். நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கு மெயில் அல்லது தொலைபோசி மூலம் தேர்வு தேதி உறுதி செய்யப்படும்.

தேர்வர்கள் தங்கள் நிஜ சான்றிழ்களுடன் பங்கேற்க வேண்டும். ‘இந்த பணி தற்காலிகாமாக 6 மாதத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பணித் திறனைப் பொறுத்து பணி நீட்டிப்பு கொடுக்கப்படும்’ என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 29-ம் தேதி தான் கடைசி நாள். குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, டிகிரி சான்றிதழ மற்றும் இதர சான்றிதழ்களின் நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி, “டீன், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிண்டி வளாகம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை -600025. விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம்.

காலியிடங்கள்:

இயற்பியல் - 5 பணியிடங்கள்
வேதியியல் - 6 பணியிடங்கள்
கணிதம் - 5 பணியிடங்கள்
ஆங்கிலம்- 5 பணியிடங்கள்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................