பிரபல தெலுங்கு டிவி நடிகை தற்கொலை; காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை

21 வயதான நாகா ஜான்சி, நேற்று தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு நடிகர் நடிகைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல தெலுங்கு டிவி நடிகை தற்கொலை; காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை

மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜான்சி

ஹைலைட்ஸ்

  • பவித்திரா பந்தேம் தொடரில் நடித்தது மூலம் பிரபலமானார் நாகா ஜான்சி.
  • ஜான்சி ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்
  • தற்கொலைக்கான காரணத்தை போலீஸ் விசாரித்து வருகிறார்கள்
Hyderabad:

தெலுங்கு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நாகா ஜான்சி. MAA டிவியில் பவித்திரா பந்தேம் தொடரில் நடித்தது மூலம் பிரபலமானார் நாகா ஜான்சி.

நேற்று ஜான்சி தன் வீட்டின் கதவை திறக்காததால், பதற்றமடைந்த ஜான்சியின் சகோதரர் துர்க பிரசாத், போலீஸார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கதவை உடைத்த போலீஸ், மின்விசிறியில் தூக்கிலில் தொங்கிய ஜான்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜான்சியின் கைப்பேசியை கைப்பற்றிய போலீஸ் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

இது வரை விசாரித்ததில், ஜான்சி தன் வீட்டில் தனியாக இருந்ததாகவும் தற்கொலை செய்யும் சில நேரங்களுக்கு முன்பு வரை ஒரு வாலிபரிடம் பேசி கொண்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஜான்சி ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர்கள் அந்த காதலை ஏற்காததால் தான் தற்கொலை செய்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

21 வயதான நாகா ஜான்சி, நேற்று தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு நடிகர் நடிகைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Listen to the latest songs, only on JioSaavn.com