This Article is From Aug 17, 2018

'முக அடையாளம்' கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு காணமல் போன சிறுவன் மீட்பு

தெலுங்கானா மாநிலத்தில், மாயமான 6 வயது சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைப்பு.

'முக அடையாளம்' கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு காணமல் போன சிறுவன் மீட்பு
Hyderabad:

ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலத்தில், மாயமான 6 வயது சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைப்பு.

கடந்த 2017 ஆம் ஆண்டு, விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் திடீரென்று மாயமானார். இதனை அடுத்து, சிறுவனின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘குடும்பம்’ குழந்தைகள் காப்பகத்தில் சிறுவன் வளர்ந்து வந்துள்ளதை ‘ஃபேஸ் ரிகக்னிஷன்’ எனப்படும் ‘முக அடையாள தொழில்நுட்பத்தின்’ மூலம் தெலுங்கான காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

தெலுங்கான புலனாய்வுத் துறை அறிமுகப்படுத்தியுள்ள முக அடையாள அங்கீகாரம் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் காணமல் போன சிறுவன் மீட்கப்பட்டுள்ளார் என்று காவல் துறை துணை ஆய்வாளர் வெங்கடேஷவரலு தெரிவித்தார். மேலும், இந்த தொழில்நுட்பம் கொண்டு, தெலுங்கான மாநிலத்தில் காணாமல் போன மற்ற குழந்தைகளை தேடும் பணியின் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

.