கொரோனவால் ஏற்பட்ட 'பாசப்போராட்டம்' : மகனை 'மீட்க' 1400 கி.மீ பயணம் செய்த தாய்

கடந்த திங்கள்கிழமை அன்று காலை உள்ளூர் போலீசின் அனுமதியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டார்

கொரோனவால் ஏற்பட்ட 'பாசப்போராட்டம்' : மகனை 'மீட்க' 1400 கி.மீ பயணம் செய்த தாய்

அவர் தனது மகனுடன் அதே நாளில் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டு புதன்கிழமை மாலை

ஹைலைட்ஸ்

  • வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பும் தனது இளைய மகனின் நிலை கண்டு
  • ஏப்ரல் 6ம் தேதி காலை, அவர் தனது பயணத்தைத் தொடங்கி மறுநாள்
  • நிஜாமுதீன் தற்போது, எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று
Hyderabad:

நாடே மிகப்பெரிய ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில், தெலுங்கானாவை சேர்ந்த ஒரு பெண். நெல்லூரில் இருக்கும் தனது இளைய மகனை அழைத்துவர, கிட்டத்தட்ட 1,400 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். 48 வயது மதிக்கத்தக்க ரஷியா பேகம் என்ற அந்த பெண், கடந்த திங்கள்கிழமை அன்று காலை உள்ளூர் போலீசின் அனுமதியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டார். கைதேர்ந்த வாகன ஓட்டிகளுக்கே சவாலான இந்த பயணத்தில், அவர் நெல்லூருக்கு தனியாகச் சென்று கடந்த புதன்கிழமை மாலை தனது இளைய மகனுடன் வீடு திரும்பியுள்ளார்.

"ஒரு சிறிய வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம் ஒரு பெண்ணுக்கு சவாலானது தான். ஆனால் என் மகனை மீண்டும் அழைத்து வரவேண்டும் என்ற எண்ணம், எனது எல்லா அச்சங்களையும் முறியடித்தது. நான் சில ரொட்டி துண்டுகளை என்னுடன் எடுத்துச்சென்றான். போக்குவரத்து அற்ற மற்றும் ஆட்கள் இல்லாத சாலைகளில், இரவில் பயணிக்க சற்று பாயமாக்கத்தான் இருந்தது" என்று, திருமதி பேகம் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள நிஜாமாபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார் ரஷியா பேகம். 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ரஷியா பேகம், தனது இரண்டு மகன்கள், ஒரு பொறியியல் பட்டதாரி, மற்றும் 19 வயதான நிஜாமுதீன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நிஜாமுதீன் தனது நண்பரைக் இறக்கிவிட கடந்த மார்ச் 12ம் தேதி அன்று நெல்லூரில் உள்ள ரஹமாதாபாத்திற்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலால் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, இதனால் அவர் திரும்ப வரமுடியாமல் அங்கு சிக்கினார்.

வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பும் தனது இளைய மகனின் நிலை கண்டு வேதனை அடைந்த அந்த தாய், மகனை அங்கிருந்து அழைத்துவர முடிவுசெய்தார். ஆனால் இளைய மகனை அழைத்து வர அவர் தனது மூத்த மகனை அனுப்பவில்லை. அவரை அனுப்பினால் போலீசார் தேவை இன்றி அவர் சுற்றித்திரிக்கிறார் என்று எண்ணி அவரை காவலில் வைக்கக்கூடும் என்று அஞ்சினார். ஆரம்பத்தில் ஒரு காரை எடுத்துச்செல்லலாம் என்று கருதிய அவர், இறுதியில் தனது இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ஏப்ரல் 6ம் தேதி காலை, அவர் தனது பயணத்தைத் தொடங்கி மறுநாள் பிற்பகல் நெல்லூரை அடைந்தார். அவர் தனது மகனுடன் அதே நாளில் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டு புதன்கிழமை மாலை தான் போத்தானை அடைந்ததாக, ரசியா பேகம் கூறினார். வழியில் உண்பதற்கு ரொட்டிகளை எடுத்துக்கொண்ட அவர், எரிபொருள் நிலையங்களில் நிறுத்தும்போதும் மேலும் சில இடங்களில் வண்டியை நிறுத்தியும் தனது தாகத்தை தீர்த்துக்கொண்டார். நிஜாமுதீன் தற்போது, எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.