This Article is From Aug 17, 2019

முதல்நாள் மாநில அரசின் விருது; மறுநாள் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட காவலர்!!

சுதந்திர தினத்தன்று சிறந்த காவலருக்கான விருது திருப்பதி என்ற காவலருக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ச்சியாக லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் எழுந்திருக்கிறது.

முதல்நாள் மாநில அரசின் விருது; மறுநாள் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட காவலர்!!

அமைச்சரிடம் இருந்து சிறந்த காவலருக்கான சான்றிதழை பெறும் திருப்பதி.

Hyderabad:

தெலங்கானாவில் சுதந்திர தினத்தன்று சிறந்த காவலருக்கான விருதைப் பெற்ற காவலர் ஒருவர் மறுநாள் ரூ. 17 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் ஐ-டவுண் காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் பள்ளி திருப்பதி ரெட்டி. சுதந்திர தினத்தன்று அவருக்கு சிறந்த காவலருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை மாநில கலால்துறை அமைச்சர் மாவட்ட எஸ்.பி. ரீமா முன்பு வழங்கினார்.

7c3qqto8

இதற்கு மறுநாளான நேற்று லஞ்ச தடுப்பு போலீசார், கான்ஸ்டபிள் திருப்பதியை ரூ. 17 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், ரமேஷ் என்பவர் மணலை லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார். அவரிடம் முறையான ஆவணங்கள் இருந்தும், மணலை கடத்துவதாக குற்றம் சாட்டி திருப்பதி வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும், இதனை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ. 17 ஆயிரம் வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரமேஷ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை ஏற்று விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் கான்ஸ்டபிள் ரமேஷை கைது செய்துள்ளனர்.

.