“தமிழகம் எனது உரிமை… தெலங்கானா எனது கடமை…”- ஆளுநர் தமிழிசை (Tamilisai)

“நான் அரசியலை விட்டு விலகுவதாக சொல்வது தவறு. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தேன். தற்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஒரு பொறுப்புக்குப் போகிறேன்"

 Share
EMAIL
PRINT
COMMENTS
“தமிழகம் எனது உரிமை… தெலங்கானா எனது கடமை…”- ஆளுநர் தமிழிசை (Tamilisai)

"ஆளுநர் பதவி என்பது மிகப் பெரிய பொறுப்பு”


தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது புதிய பொறுப்பு குறித்தும் தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

தமிழக பாஜக தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். அவரை தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்து சமீபத்தில் அரசாணை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்படுவதால், தீவிர அரசியலில் இருந்து அவர் விலகுகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

“நான் அரசியலை விட்டு விலகுவதாக சொல்வது தவறு. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தேன். தற்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஒரு பொறுப்புக்குப் போகிறேன். அவ்வளவுதான். இப்போதும் அரசியலில்தான் இருக்கிறேன். ஆளுநர் பதவி என்பது மிகப் பெரிய பொறுப்பு” என்றார் தமிழிசை.

தொடர்ந்து அவர், “தமிழகத்துக்குப் பணியாற்ற வேண்டியது எனது உரிமை. தெலங்கானாவுக்குப் பணியாற்ற வேண்டியது எனது கடமை. தமிழகத்தின் மகளாகவும் தெலங்கானாவின் இசையாகவும் நான் செயல்படுவேன். இரு மாநிலங்களுக்கும் பாலமாக நான் இருப்பேன்” என்று பேசினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................