மதுபானக்கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணத்திலே ரூ.900கோடி வருமானம் பார்த்த அரசு!

அண்டை மாநிலமான ஆந்திராவில் கலால் துறை கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களால், இந்த ஆண்டு மதுபானக்கடை நடத்துவதற்கான விண்ணப்பத்தின் விற்பனை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,

மதுபானக்கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணத்திலே ரூ.900கோடி வருமானம் பார்த்த அரசு!

இந்த ஆண்டு, 2,216 மதுக்கடைகளுக்கு உரிமம் பெற 48,000 விண்ணப்பங்களை கலால் துறை பெற்றது.

Hyderabad:

தெலுங்கானாவில் மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகளை நடத்துவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தவர்கள் மூலம் ரூ.968 கோடி வருமானம் பார்த்துள்ளது அம்மாநில கலால் துறை. 

இந்த ஆண்டு, 2,216 மதுக்கடைகளுக்கு உரிமம் பெற 48,000 விண்ணப்பங்களை கலால் துறை பெற்றது. இதற்காக, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் திருப்பிச் செலுத்த முடியாத டெபாசிட் தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர். இது கடந்த 2017ம் ஆண்டை காட்டிலும் இரட்டிப்பான தொகையாகும். 

அண்டை மாநிலமான ஆந்திராவில் கலால் துறை கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களால், இந்த ஆண்டு மதுபானக்கடை நடத்துவதற்கான விண்ணப்பத்தின் விற்பனை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர், ஆந்திர அரசு படிப்படியாக மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறது. 

தெலுங்கானாவில் தற்போதுள்ள மதுபானக் கொள்கையின்படி, 2019 நவம்பர் முதல் 2021ம் ஆண்டு அக்டோபர் வரை இரண்டு வருட காலத்திற்கு மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக நிறைய போட்டிகள் இருக்கும். 

இதில், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மதுபானக்கடை அமைந்துள்ள பகுதியின் மக்கள் தொகையை பொறுத்து, ரூ.1 கோடி முதல் 2 கோடி வரை உரிமக் கட்டணத்திற்காக செலுத்த வேண்டும். இந்த புதிய லைசன்ஸ் வரும் நவ.1ஆம் தேதி கொடுக்கப்படும். 

ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஒரு புதிய கலால் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள மொத்தத் தடையை படிப்படியாக, குறைத்து அரசே மதுபான விற்பனை நிலையங்களை கையகப்படுத்தும் முடிவை எடுத்துள்ளது. மேலும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என அதற்கான விற்பனை நேரத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது.

ஆந்திர அரசின் கொள்கை மாற்றங்கள் பாரம்பரியமாக உள்ள மது விற்பனையாளர்களை புதிய ஏலதாரர்களுடன் சேர்ந்து, கூட்டாக தெலுங்கானாவில் உரிமம் பெற கட்டாயப்படுத்தியுள்ளது, குறிப்பாக எல்லை மாநிலத்தின், எல்லை தாண்டிய குடியிருப்பாளர்களிடமிருந்து அதிக விற்பனையை காண வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


 

More News