“ஓர் பாலின ஈர்ப்பாளராக இருப்பது என் பிழை அல்ல…”- சென்னையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார்.

“ஓர் பாலின ஈர்ப்பாளராக இருப்பது என் பிழை அல்ல…”- சென்னையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவின்ஷுவின் உடல், ஜூலை 3 ஆம் தேதி கரை ஒதுங்கியது.

Chennai:

சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. 

அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். 

ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் நடக்கும் விதம், யோசிக்கும் விதம், உணரும் விதம், பேசும் விதம் பெண் போல இருக்கும். இதை இந்திய மக்கள் விரும்ப மாட்டார்கள். 

ஓர் பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரியாதை கொடுக்கும் மற்ற நாடுகளை நான் மதிக்கிறேன். இந்தியாவிலும் ஓர் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை நான் மதிக்கிறேன். நான், ஓர் பாலின ஈர்ப்பாளராக இருப்பது எனது பிழை இல்லை. அது கடவுள் செய்த பிழை. எனது வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்று உருக்குமாக கூறியுள்ளார். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவின்ஷுவின் உடல், ஜூலை 3 ஆம் தேதி கரை ஒதுங்கியது. அதைப் பார்த்த உள்ளூர்வாசிகள், போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.