சிறு குழந்தைகள் பேசக் கூடாது என்பதற்காக வாயில் டேப்பை ஒட்டிய ஆசிரியை!

பெற்றோர்களின் புகாரையும் மற்ற மாணவர்களின் நலனை கருதியும் அந்த ஆசிரியையை பணிநீக்கம் செய்ததாக பள்ளி நிர்வாகம் கருத்து.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிறு குழந்தைகள் பேசக் கூடாது என்பதற்காக வாயில் டேப்பை ஒட்டிய ஆசிரியை!

பள்ளி நிர்வாகம் உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.


Gurgaon: 

ஹைலைட்ஸ்

  1. Teacher suspended for allegedly putting sellotape on mouth of 2 children
  2. A video of the October incident has been surfaced on social media
  3. The teacher claimed that the students sometimes used filthy language

ஹரியானாவில் உள்ள குர்கோனில் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயலும் நர்சரி மாணவர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் வாய்களில் டேப்பை ஓட்டிய ஆசிரியை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த அச்சுறுத்தும் சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தேறிய நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

அந்த வீடியோ காட்சியில் நான்கு வயதேயுள்ள மாணவர்களின் வாய்களில் வேண்டுமென்றே குழந்தைகளின் வாயில் டேப்பை ஒட்டுவதுபோல் காட்சி அமைந்திருக்கும். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பணிநீக்கம் செய்த்து. 


‘பெற்றோர்களின் புகாரையும் மற்ற மாணவர்களின் நலனை கருதியும் அந்த ஆசிரியையை பணிநீக்கம் செய்தோம்' என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 

இது குறித்து அந்த ஆசிரியரிடம் கேட்டபோது அக்குழந்தைகள் மோசமான வார்தைகளை பயன்படுத்துவதுடன் மற்ற மாணவர்களையும் தொந்தரவு செய்வதாக கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................