தமிழக அரசில் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO -ல் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!

2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) 2400 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பதிவு ஏற்கவே தொடங்கியுள்ளது. பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் TANGEDCO ன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர்/ கணக்கர்கள், உதவி பொறியாளர் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
 

Apply Online

காலிப்பணியிட விவரங்கள்


* இளநிலை உதவியாளர் / கணக்கர்கள்  - 500 பணியிடங்கள்

* உதவி பொறியாளர்கள் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில்) - 600 பணியிடங்கள்

* மதிப்பீட்டாளர்கள் - 1300 பணியிடங்கள்.

போட்டித் தேர்வு வாயிலாக தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்காக விண்ணப்பித்தவர்கள், டேன்ஜெட்கோவின் இணைய தளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். 

விண்ணப்பிப்போர் தங்களது புகைப்படம், கையெழுத்து, இடது கை ரேகை உள்ளிட்டவற்றை, விதிப்படி ஸ்கேனிங் செய்து அப்லோட் செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

மாற்றுத் திறனாளிகள், இடது கை ரேகையை பதிவேற்றம் செய்ய முடியாதவர்கள் வலது கை ரேகையை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தை ப்ரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த அழைப்பு வரும்போது, இந்த ப்ரின்ட் அவுட்டை கொண்டு வர வேண்டும். 
 

Click here for more Jobs News