தமிழகத்தில் தீவிரமடையும் Rain... கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert for TN - கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் செண்டமங்கலத்தில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமடையும் Rain... கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert for TN - நாளையும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரவே அதிக வாய்ப்புள்ளது. 

Heavy Rain Alert for TN - வடகிழக்கு பருவமழையினால், தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, சேலம், நாமக்கல், மதுரை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

நாளையும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரவே அதிக வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் செண்டமங்கலத்தில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து சேலத்தின் ஓமலூர் மற்றும் திருவண்ணாமலையின் செங்கத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,' எனத் தெரிவித்துள்ளது. 

More News