அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

குமரிக்கடல் பகுதியில் சீற்றம் காணப்படுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மைய இயக்குனர் புவியரசன் அளித்த தகவலில் கூறியிருப்பதாவது-

தெற்கே குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடாமற்றும் மாலத்தீவு பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லதுஇரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குறிப்பாக கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Quick Links
PNR Status

................................ Advertisement ................................