'தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்' - முதல்வர் நம்பிக்கை!!

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகிற அளவுக்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது கிளைகளை சென்னையில் திறந்துள்ளன என்று முதல்வர் பேசினார்.

'தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்' - முதல்வர் நம்பிக்கை!!

தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்த வருவதாக முதல்வர் பேசியுள்ளார்.

தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் அமைக்கப்படவுள்ள டி.எல்.எஃப். வளாகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது-

தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்த வருகிறது. 2-ம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டைத் தொடர்ந்து, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 83 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகிற அளவுக்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. 

மற்ற நிறுவனங்களும் சென்னையில் தங்களது கிளைகளை தொடங்குவதற்கு விரும்புகின்றன. தொழில் தொடங்க விரும்புவோரை தமிழக அரசு வரவேற்கிறது. அவர்கள் தொழில் தொடங்க தேவையான அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மிகக் குறுகிய காலத்தில் தமிழக அரசு வழங்குகிறது. இதன் மூலம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும்.
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

More News