சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் வெளுத்துவாங்கப் போகுது மழை! - Tamilnadu Weatherman Forecast!

Tamilnadu Weatherman Forecast - 'உள் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'

சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் வெளுத்துவாங்கப் போகுது மழை! - Tamilnadu Weatherman Forecast!

Tamilnadu Weatherman Forecast - சென்னை முதல் ராமநாதபுரம் வரையுள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்

Tamilnadu Weatherman Forecast - தமிழகத்தில் பெய்து வரும் மழையானது அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்று பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது முகநூலில், “ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் பகுதிகளில் இரவு பெய்து வந்த மழை, பகல் ஆன பிறகும் தொடர்கிறது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 78 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேளம்பாக்கத்தில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் அங்கும் இங்கும் மழை மேகங்கள் சூழ்கின்றன. இதனால், திடீரென்று மழை பெய்தால் ஆச்சரியப்படாதீர்கள். கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று நல்ல மழை பெய்யும். 

உள் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்று மழை கொட்டும். சென்னை முதல் ராமநாதபுரம் வரையுள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். 

ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்துள்ளார். 
 

More News