தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!!

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!!

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் தண்ணீர் பிரச்னை தீவிரம் அடைந்திருக்கிறது. 

ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. இதனால் மக்கள் நல்ல மழையை எதிர்பார்த்துள்ளனர். 

தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை கனமழை பெய்யாமல் இருக்கிறது. இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, உள்ளட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................