This Article is From May 18, 2019

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த அனல் காற்று 3 நாட்களுக்கு வீச வாய்ப்பு உள்ளது.

வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் அது அனல் காற்றாக மாறி வீசக்கூடும். இயல்பைவிட 5 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் அனல் காற்று இருக்காது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.