மழைவர வேண்டி மதுரையில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை!!

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் உள்ளிட்டவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மழைவர வேண்டி மதுரையில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை!!

ஆளுங்கட்சி பொறுப்புடன் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


மழை வர வேண்டி மதுரையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பல இடங்களில் யாகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் மத வேறுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதற்கிடையே தண்ணீர் பிரச்னையை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதேசமயம், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை மாநில அரசு சரியாக கையாளவில்லை என்று கூறி எதிர்க்கட்சியான திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. பிளாஸ்டிக் குடங்களை கையில் வைத்துக் கொண்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குடம் இங்கே இருக்கிறது, தண்ணீர் எங்கே என்று கேட்டு முழக்கங்களை எழுப்பினர். 

இதற்கிடையே தமிழக தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினார். கோடை காலம் மற்றும் மழையின்மை காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................