This Article is From Apr 05, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 லிருந்து 571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 லிருந்து 571 ஆக உயர்ந்துள்ளது. இன்று 86 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 485 லிருந்து 571 ஆக அதிகரித்திருக்கின்றது.

மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அதிக அளவில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தொற்று உள்ளதாக இன்று புதியதாகக் கண்டறியப்பட்ட 86 நபர்களில் 85 நபர்கள் டெல்லி நிகழ்வில் பங்கேற்று திரும்பியவர்கள் என் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 90824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 10,814 என்றும், 4612 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தற்போது 1848 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளார்கள். 8 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாவார்கள். 7 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாகத் தொற்று பாதித்தவர்களில் 7 பேரின் நிலைமை சற்று மோசமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 38,88,896 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 15,000 களப்பணியாளர் பயன்படுத்தியுள்ளோம். ” என சுகாதார துறை செயலர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இன்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தினை கடந்துள்ளது. 

.