This Article is From May 02, 2019

ராமலிங்கம் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை!

தமிழக போலீசார் ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளனர்.

ராமலிங்கம் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை!

20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ராமலிங்கம் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

பாமக நிர்வாகி ராமலிங்கம் கடந்த பிப்ரவரி 6-ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தை அவர் எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கும்பகோணத்தில் இந்த சம்பவம் நடந்தது. 

இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தின. கொலையை கண்டித்து கடையடைப்பு நடந்ததால், பிரச்னை பெரிதானது. 

ராமலிங்கம் கொலை தொடர்பாக 10-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ.விடம் போலீசார் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 20 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. இதனால் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.