தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!!

ஜூலை 1-ம்தேதி ஆரம்பித்து ஜூலை 22-ம்தேதியன்று மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறுகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது.


தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டி. ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. 

இதற்கான தேர்தல் ஜூலை 18-ம்தேதி நடைபெறும் என இஇந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக 3 எம்.பி.க்களையும், அதிமுக 3 எம்.பி.க்களையும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும். 

தேர்தல் தேதி மற்றும் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை ஜூலை 1-ம்தேதி வெளியிடப்படும். ஜூலை 8-ம்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்து கொள்ளலாம். 9-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 11-ம்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 

மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் 18-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை 22-ம்தேதியுடன் முடிகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................