This Article is From Jun 01, 2020

தொடங்கிய தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தொடங்கிய தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

ஹைலைட்ஸ்

  • இன்று முதல் தென் மேற்குப் பருவமழை ஆரம்பிக்கிறது
  • கேரளாவில் தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ளது
  • வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது

இன்று முதல் தென் மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் அறிக்கையில், ‘தென் மேற்குப் பருவமழை கேரளாவல் இன்று ஜூன் 1 ஆம் தேதி துவங்குகிறது. 

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தின் சில பகுதிகளில் 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி, இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

.