This Article is From Aug 02, 2019

சிக்கன் குழம்புக்கு சாதிப் பெயர் வைத்ததால் சிக்கல்! மன்னிப்பு கேட்டது மதுரை உணவகம்!!

கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற அந்த குழம்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தை கண்டித்து போராட்டம் நடந்தது.

சிக்கன் குழம்புக்கு சாதிப் பெயர் வைத்ததால் சிக்கல்! மன்னிப்பு கேட்டது மதுரை உணவகம்!!

சிக்கன் குழம்புக்கு சாதிப்பெயர் வைத்ததற்கு உணவகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Madurai:

மதுரையில் சிக்கன் குழம்புக்கு பிராமண சமுதாயத்தின் பெயர் வைத்ததால் பிரச்னை ஏற்பட்டது. போராட்டம் வெடித்ததை தொடர்ந்து தனது செயலுக்கு உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

மதுரையில் ஓட்டல் மிளகு என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சிக்கன் குழம்பு வகை ஒன்றுக்கு பிராமண சமூகத்தின் பெயரை சூட்டியிருந்தது. அதாவது 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இதுதொடர்பாக நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டும், போர்டுகள் வைக்கப்பட்டும் இருந்தன. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அதுவும் அசைவம் உண்ணாத பிரிவினரின் பெயரை, அசைவ உணவுக்கு சூட்டியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். 

இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ஓட்டல் நிர்வாகம் சிக்கன் விளம்பரத்தை நிறுத்திக் கொள்வதாகவும், சமூக வலைதளம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட விளம்பரத்தை அப்புறப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.