This Article is From Aug 28, 2019

ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி!!

அக்டோபர் முதல் வாரத்தில் அவர் நாசாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். 

ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி!!

அமெரிக்காவை சேர்ந்த கல்வி நிறுவனம் போட்டித் தேர்வு நடத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி தான்யா தஸ்னீம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லவுள்ளார். 

மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா தஸ்னீம். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Go4Guru என்ற கல்வி நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்து கொண்டார். 

இதில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டித் தேர்வில் பங்கேற்ற தஸ்னீம் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்ல தகுதி பெற்றுள்ளார். 

அக்டோபர் முதல் வாரத்தில் அவர் நாசாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். 

அவரைத் தவிர்த்து ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் காஷ்யம் பள்ளியை சேர்ந்த சாய் பூஜிதா என்ற மாணவியும், மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் உள்ள ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த அபிஷேக் சர்மா என்ற மாணவரும் நாசாவுக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர். 

.