நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்! தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை!!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்! தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை!!

திருப்பூர் மாணவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் விரக்தியுற்ற தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்த அவர் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 490 மதிப்பெண்களை எடுத்துள்ளார். 

இதேபோன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் முடிவுகளுக்கு தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 34 ஆயிரம் மாணவர்கள், இந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்பட்டது. 

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாருமில்லை. அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். 

இவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு 9.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................