This Article is From Aug 21, 2019

''இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு'' - முதல்வர் பழனிசாமி!!

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

''இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு'' - முதல்வர் பழனிசாமி!!

ஈரோட்டில் 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது-


போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, ஈரோடு - பெருந்துறை சாலையில் ரூ.300 கோடி மதிப்பில் சுமார் 5.5 கி.மீ நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிந்தவுடன் பாலப் பணிகள் தொடங்கப்படும். 

இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. அகில இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 25.8%. ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையோ 48.6%.

முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பி வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டிற்கு ரூ.460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு முதல்வர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

.